Paavendhar Tamil Literary Forum
14/07/23 அன்று எம் பள்ளியின் பாவேந்தர் தமிழ் இலக்கிய மன்றத் துவக்க விழாவும் கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாடப்படும் காமராசரின் பிறந்த நாள் விழாவினையும் இணைந்து கொண்டாடப்பட்டது. இவ்விழாவிற்கு சிறப்பு விருந்தினர்களாக தவத்திரு .மருத்தாச்சல அடிகளார் துவக்கி வைத்த பேரூர் தமிழ் இலக்கிய மன்றத்தின் செயலாளர் ஐயா ரவி அவர்களும் துணைச் செயலாளர் கவிஞர். அம்மா சங்கரி அவர்களும் தலைமை தாங்கினார். மேலும் பள்ளியின் இயக்குநர் டாக்டர்.C.K ஆனந்த் கிருஷ்ணன் அவர்களும் துணை இயக்குநர் திருமதி. சௌமியா ஆனந்த், முதல்வர் ஐயா மனோகரன் ஆகியோர் கலந்து கொண்டனர். விழா குத்துவிளக்கேற்றி இறைவணக்கத்துடன் விழா துவங்கியது. இவ்விழாவின் எம் பள்ளி தமிழ் ஆசிரியர் அவர்கள் வரவேற்புரை ஆற்றியதோடு அனைவருக்கும் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டது. விழாவில் மாணவிகள் பரதநாட்டியம், மயில் நடனம் , காமராஜர் உரை ,திருக்குறள், பாடல் ,பாரதிதாசன் கவிதை என பல்வேறு நிகழ்வுகளில் மாணவர்கள் வேடம் புனைந்து தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர். இலக்கிய மன்றத்தின் வாயிலாக மாணவர்களுக்கு பல்வேறு வகையான பேச்சுப்போட்டி. கட்டுரைப் போட்டி, ஓவியப்போட்டி, கவிதை போட்டி, திருக்குறள் ஒப்பித்தல் போட்டி எனப் பல்வேறு அப்போட்டிகள் நடத்தி வெற்றி பெற்ற முதலிடம், இரண்டாம், மூன்றாம் இடம் பிடித்த மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. சிறப்பு விருந்தினர்கள் மாணவர்களுக்கு அறிவுரைகள் கூறி சிறப்புரையாற்றினார்கள்.இறுதியாக நன்றியுரை கூறி நாட்டுப் பண்ணுடன் விழா நிறைவடைந்தது.