Mahakavi Bharathiyar Birthday

11/12 /23 நம் பள்ளியில் மகாகவி பாரதியாரின் பிறந்தநாள் விழாவினை தமிழ்த் துறை ஆசிரியர்கள் சிறப்பித்தார்கள். இவ்விழாவினைப் பள்ளி இயக்குநர் டாக்டர். திரு. C.K ஆனந்த் கிருஷ்ணன் மற்றும் துணை இயக்குநர் திருமதி சௌமியா ஆனந்த் மற்றும் முதல்வர் ஆகியோர் தலைமை தாங்கி சிறப்பித்தார்கள். இவ்விழாவில் நான்கு முதல் பத்தாம் வகுப்பு வரையுள்ள மாணவர்கள் கலந்து கொண்டு நடனம், பாடல் ,கவிதை, எனப் பல்வேறு நிகழ்வுகளில் கலந்து கொண்டனர். நிகழ்வுகளில் பங்கேற்ற அனைத்து மாணவச் செல்வங்களுக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டது. இறுதியாக நாட்டுப்பண்ணுடன் விழா நிறைவடைந்தது.